ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த Sparta II சரக்கு கப்பல், பின்லாந்து வளைகுடா பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பால்டிக் கடல் பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிகாரிகளின் தகவலின்படி, சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த அந்த கப்பல் மீது 2 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் 16 உறுப்பினர்கள் கொண்ட குழு உயிர்காப்பு படகுகளில் ஏறி, அருகிலுள்ள மற்றோரு ரஷ்ய கப்பலுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதலுக்குப் பிறகு கப்பலின் சேத அளவை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டதுடன், கப்பலில் இருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.லெனின்கிராட் பிராந்திய ஆளுநரான Aleksandr Drozdenko, கப்பலிலிருந்த குழுவினரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.இதற்கிடையில், பின்லாந்து எல்லைக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில், சேதமடைந்த கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து பின்லாந்தின் கடல் எல்லைக்குள் மிதந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் மற்ற கடல் போக்குவரத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.“தேவைப்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பின்லாந்து மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று பின்லாந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், Aleksandr Drozdenko வெளியிட்ட தகவலின்படி, லெனின்கிராட் பிராந்தியத்தின் மேல் பறந்த 80 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் பின்னர் ட்ரோன் அச்சுறுத்தல் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.