தமிழக வெற்றிக் கழகத்தின்  சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்பாபு காலமானதை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியானதாகத் தமிழக சட்டமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளத

 
திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் தற்போது கொளத்தூர் ஆகிய ஆறு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆளுங்கட்சியான தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசாங்கம் மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், இந்த ஆறு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 
 
இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்றும், அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களும் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க இப்போதே வியூகங்களை வகுத்து வருவதால், இந்த ஆறு தொகுதிகளின் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.