பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்றைய அனைத்து விரிவுரைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு வார காலத்திற்குள் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் மேற்கொள்ளும் இரண்டாவது வேலைநிறுத்தம் இதுவாகும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்ட ஊதியங்கள், மேலதிக நேர ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.