பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது.    
முதலில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் சொல்லி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நேற்று நவம்பர் 23ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் பிரிவு 75ன் கீழ் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிரிவு 132ன் கீழ் அரசு ஊழியரை தனது பணியை செய்ய விடாமல் தடுப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்பி அந்தஸ்திலான அதிகாரி விசாரணை நடத்தவும், ஐஜி அந்தஸ்திலான அதிகாரி மேற்பார்வையிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று முன்தினம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பெண் அதிகாரியிடமிருந்தோ தலைமை செயலாளரிடமிருந்தோ காவல்துறைக்கு முறையான புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த நாள் நடைபெற்ற விசாரணையில், இந்த விவகாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், நவம்பர் 23ஆம் தேதி எழுத்துப்பூர்வமான புகார் கிடைத்ததை தொடர்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் பெண் ஆட்சியரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.இதற்கிடையே இந்த விவகாரத்தை தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் கையில் எடுத்துள்ளது. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சாய் குமாரிடம் நேற்று நவம்பர் 24ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை நியூஸ் மினிட்ஸ் ஊடகத்திடம் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் தொடர்புடைய எம்எல்ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பின்னணி இந்த விவகாரத்தை திமுக எம்பி கனிமொழி தான் முதலில் எழுப்பினார். பெண் அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பொது நிகழ்ச்சிகளில் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் அருள் விக்னேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அதிகாரியின் அரசு இல்லத்துக்குள் நுழைய முயன்றதாகவும் புகார் எழுந்தது. இதனை ஆரம்பத்தில் எம்எல்ஏ மறுத்திருந்தார். ஆனால், இப்போது வழக்குப்பதிவு வரை இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. விசாரணை குழு நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் உள் புகார்கள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் எஸ். மதுமதி, பி. சுமதி, சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். வரும் நாட்களில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.