அரசாங்கம் பழைய பயங்கரவாதச் சட்டத்திற்குக் கதவடைத்து, புதிய மூன்று சட்டங்களின் ஊடாக அந்தக் கதவுகளைத் திறக்கப்போகிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது; அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய சட்டங்களால் இளைஞர்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படவுள்ளது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்ட ஊடகங்களுக்கு முடியாது என்றால், மக்களின் துயரங்களை வெளிப்படுத்த முடியாது என்றால், அது அபிவிருத்தியடைந்த ஜனநாயகம் அல்ல. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது; இணையவழிப் பாதுகாப்புச் சட்டமும் இன்னும் நீக்கப்படவில்லை.எனவே, பழைய பயங்கரவாதச் சட்டத்திற்குக் கதவடைத்து, புதிய மூன்று சட்டங்களின் ஊடாக அந்தக் கதவுகளைத் திறக்கப்போகிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, தற்போதைய இளைஞர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை; அவர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். யாராவது தவறு செய்தால், அதனை அச்சமின்றிச் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள். அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய சட்டங்களால் இளைஞர்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படவுள்ளது.மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் குறித்துப் பாரியளவில் பேசப்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இச்சட்டமூலம் தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்; குறிப்பாக, தடுத்துவைப்பு, ஒன்றுகூடும் சுதந்திரம், கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ளனர். சர்வதேச அமைப்புகள் பல இச்சட்டத்தினால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து விமர்சித்துள்ளன. அதனால், அரசாங்கம் இச்சட்டங்களைக் கொண்டுவந்து, குற்றச்செயல்களை வெளிப்படுத்தும் ஊடகங்களைப் பலவீனப்படுத்தக் கூடாது.எனவே, ஊடகச் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலங்கள் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள் அச்சமின்றித் தகவல்களை அறிக்கையிடும் சுதந்திரத்தில் அரசாங்கம் கைவைக்க வேண்டாம்” என்றார்.