ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு பலமாக சட்டங்களை உருவாக்க வேண்டும். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் எச்சந்தர்ப்பத்திலும் சட்டமியற்ற போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீதித்துறை தொடர்பில் முன்வைத்துள்ள திட்டங்களை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம். ஏற்கனவே அதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த அமைச்சை பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சகலரையும் சட்டத்தின் முன்னால் சமமானவர்கள் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நீதித்துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்கும் போது பெரும் சவால்கள் காணப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக்கிடந்தன. வழக்கு விசாரணைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. நீதித்துறையில் தொழில்நுட்ப பற்றாக்குறை மற்றும் மனித வள பற்றாக்குறை என்பன நிலவின. அப்போது இருந்து இந்த சவால்களை வெற்றிக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.கடந்த 2 வருடங்களாக நீதித்துறையை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அன்று 11 இலட்சத்து 52 ஆயிரம் வரையிலான வழக்குகள் தேங்கிக்கிடந்தன. இப்போது அது 10 இலட்சத்து 67ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நாட்டில் 29 சிறைச்சாலைகளில் நிலவிய நெரிசல் நிலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை குழுவொன்று இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ளது. சிறைகளில் தற்போது 36,500 கைதிகள் இருக்கின்றனர். அவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சில அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு தங்களுக்கு ஏற்றால் போன்ற தீர்ப்புகளை நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருந்தாலும் கடந்த காலங்களை போன்று இப்போது செய்ய முடியாது.முழு அரச சேவைகளும் சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய சுயாதீன நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை அமைக்க வேண்டும். இதற்காக சட்டத்திட்டங்கள் அவசியமாகும். இதன்படி ஒருங்கிணைந்த குற்றச் செயல்களை தடுப்பதற்காக பலமான சட்டதிட்டங்கள் அவசியமாகும். விசாரணை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்காக சட்ட கட்டமைப்பு அவசியமாகும்.ஆனால் எந்த வகையிலும் அரசாங்கம் நாட்டு மக்களை அடக்கும் வகையிலான சட்டத்திட்டங்களை நிறைவேற்றாது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலங்களுக்கு சில திருத்தங்கள் கொண்டுவருவது அவசியமாகும். நாட்டு மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றபோவதில்லை என்றார்.