அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களை ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கண்டிக்காத வரையில், அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்யக் கோர முடியாது என்று ஈரான் அணுசக்தி அமைப்பின் (AEOI) தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"இராணுவத் தாக்குதல்களைக் கண்டிக்க முன்வராத ஒரு அமைப்பு, தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கும் ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்யக் கோர முடியாது.

ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை மறைத்து, நிலத்தடியில் கட்டியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இது மறைப்பதற்காகச் செய்யப்பட்டதல்ல. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க-சியோனிச சக்திகளால் ஈரானின் அணுசக்தித் துறை மீது பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் பாதிப்புகளாலேயே இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை மீண்டும் மீண்டும் குறிவைத்துத் தாக்கியுள்ளன. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திடம் பேசுகையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.'' என அவர் கூறியுள்ளார்.