ஈரானிய அணுமின் நிலையத்தில் கட்டுமான பணிகள் தொடரும் என்று ஈரானுக்கான ரஷ்யத் தூதர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள புஷேர் (Bushehr) அணுமின் நிலையத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலகுகள் (units) கட்டப்படும் என்று ஈரானுக்கான ரஷ்யத் தூதர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பணியில் உதவுவதற்காக 300 ரஷ்ய நிபுணர்கள் ஈரான் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், புஷேர் அணுமின் நிலையமும் பலமுறை இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள், கதிர்வீச்சு பாதிப்பு ஈரானின் எல்லைகளைத் தாண்டி பரவிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.