ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள் !

03.05.2022 10:54:34

ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பி இன்று வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து ஜே.வி.பியின் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினால் இந்த தகவல்கள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்கள் இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பலம் வாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,