குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம் மறுபரிசீலனை.
09.02.2026 14:00:00
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இந்த சட்டமூலம் குறித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் ஒரு மாத கால அவகாசம் நீதி அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுவின் விசாரணையை முடித்து வைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.