அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் நியூஸிலாந்து அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணியால், 13.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டேன் கிளீவர் தெரிவுசெய்யப்பட்டார்