மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்!

26.02.2022 09:30:51

மட்டக்களப்பில் ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை லட்சுமணன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளர்   இன்று காலை தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் தேவபிரதீபன் தெரிவித்துள்ளார்.