நாடாளுமன்றிற்கு வருகைதராத மகிந்தவும் நாமலும்!

17.05.2022 08:50:25

நாடாளுமன்றத்துக்கு இன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பிரசன்னமாகவில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இன்று முதலாவது நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படுகிறது.

எனினும் இதன்போது மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே கோட்டா கோ கம தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.