ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர் கைது!

27.02.2022 08:03:52

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. .

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்கு பின் மீனவர்களை கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் தடுத்து வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.