எரிவாயுவை வழங்க தாய்லாந்திலிருந்து புதிய நிறுவனம்

30.04.2022 09:05:58

குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க, தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


 
கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டதுடன், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.

இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.