உயரிய தலைவர்கள் காட்டிய வழியில் இருந்து நாம் மாறவில்லை.
01.05.2022 17:00:45
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அசைத்து விடமுடியாது - அழித்துவிடவும் முடியாது என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (01.05.2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செந்தில் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
“ அன்று முதல் இன்றுவரை கொள்கை அடிப்படையிலேயே காங்கிரஸ் பயணிக்கின்றது.சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸின் உயரிய தலைவர்கள் காட்டிய வழியில் இருந்து நாம் மாறவில்லை.