தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

10.01.2022 07:27:34

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டொலர்கள் குறைந்துள்ளதாகவும் இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தையில் ஒரு வாரத்துக்கு முன்னர் 1,818 டொலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் 1,789 டொலராக குறைந்துள்ளது.

இலங்கை செட்டியார் தெரு சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 112,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 121,500 ரூபாவாகவும் அதிகரித்ததுடன், எதிர்காலத்தில் அந்த விலைகள் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.