பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்யும் தனிநபர் பிரேரணை.

06.02.2026 15:24:58

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் சாணக்கியன் இராசமாணிக்கம்,

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (இரத்து ) சட்டம் என்று தலைப்பிடப்பட்ட வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளேன்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இதனூடாக இரத்துச் செய்யப்பட வேண்டும். இந்த தனிநபர் பிரேரணை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை தற்போது மறக்கப்பட்டள்ளது.ஆகவே வழங்கிய வாக்குறுதிக்கமைய செயற்படுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.