புதிய கட்சிக் கூட்டணி தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு!

11.07.2022 09:38:44

சிறிலங்கா அரச தலைவர் உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத்  தெரிவிக்கையில்,

 

கொவிட் தொற்று நாட்டில் பொருளாதார ரீதியாக பேரழிவை உருவாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாட்டு பணத்தை தடுப்பூசிகளுக்காக செலவிட வேண்டியிருந்தது எனவும் அவர் அந்த ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.