சமையல் எரிவாயு விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு நிவாரணம்
25.12.2021 07:45:01
லிட்ரோ சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு, நிவாரணம் செலுத்தும் இயலுமை உள்ளதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அனில் கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம், சுமார் 20 பில்லியன் ரூபா ஈவுத்தொகை காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த காலங்களில் எரிவாயுவுடன் தொடர்புடைய அனர்த்தங்களின் போது, இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.