உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு
11.01.2022 04:56:01
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடித்து அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.