அவசரகால விதிகளுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!
26.02.2026 14:21:08
|
டித்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. |
|
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. |