காதலியை கடத்திச் சென்ற இளைஞன் விபத்தில் பலி

08.12.2021 05:56:09

தருமபுரம் வட்டக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

டிப்பர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த இளைஞரும் பெண்ணும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இளைஞன் ஒருவர் தனது காதலியை கடத்திச் சென்று டிப்பர் வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து டிப்பர் பாரவூர்தியின் சாரதி உட்பட பலர் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.