ராஜபக்சக்களின் மீட்பராக இந்தியா இருந்தால்....

11.07.2022 09:37:48

ராஜபக்சக்களை இந்தியா பாதுகாக்க முயற்சித்தால் அந்நாட்டு திறைசேரியை பாதுகாத்துக்கொள்ள நேரிடும் என ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜபக்சக்களை பாதுகாக்க இந்திய இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தார்.

பிமல் ரட்நாயக்க எச்சரிக்கை

இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் பிமல் ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

ராஜபக்சக்களை மீட்கும் முயற்சியில் இந்தியா

ராஜபக்சக்களை இந்தியா மீட்டுச் சென்றால் அதற்கான செலவுகளையும் இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறு ராஜபக்சக்களை இந்தியாவிற்கு மீட்டு சென்றதன் பின்னர் அந்நாட்டு திறைசேரியை கவனமாக பார்த்துக்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டி

யுள்ளார்.