கல்கமுவ – மாகல் கடவல பகுதியில் விபத்து : இருவர் பலி

29.12.2021 13:14:54

கல்கமுவ – மாகல் கடவல பகுதியில் சிறிய ரக பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.