இலங்கையில் முதன்முதலாக 'மொக்சா' என்ற மின்சார கார் இன்று அறிமுகம்

28.07.2022 15:51:45

இலங்கையில் முதன்முதலாக தயாரிக்கப்பட்ட 'மொக்சா' என்ற மின்சார கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய காலப்பகுதியில் நிலவுகின்ற எரிபொருள் நெருக்கடிக்கு இந்த மின்சார வாகனம் தொழிநுட்பம் வரவேற்கத்தக்கவிடயமாகும்.

 

நடைமுறை தீர்வு

 

இதேவேளை,  தற்போதைய தொழில்நுட்ப நிலைமாற்றத்தில் மின்சார வாகனம் ஒரு நடைமுறை தீர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலையான கார்பன் தொழில்நுட்பத்தை நோக்கிய எதிர்காலத்துக்கு இது முன்மாதிரியாக அமையும் எனவும் எதிா்பார்க்கப்படுகிறது.