அனுமதியின்றி ட்ரோன் கமரா இயக்கிய இருவர் கைது
14.11.2021 06:40:27
விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பகுதிகளில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய இருவர் தெல்தெனிய காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
அவர்கள் 28 மற்றும் 34 வயதினையுடைய கொதட்டுவ மற்றும் களனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.