நாளைமுதல் வழமைக்கு திரும்பவுள்ள எரிவாயு விநியோகம்

17.03.2022 14:11:44

3,500 மெட்ரிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கை  இன்று ஆரம்பமாகியுள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.எரிவாயு கொள்கலன்களுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவும்  தெரிவித்துள்ளது.

இதேவேளை போதுமானளவு எரிவாயு இருப்பு இல்லாமை காரணமாக எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய நிறுவனங்கள் நேற்று அறிவித்திருந்தன அவை நாளைமுதல் வழமைக்கு திரும்பவுள்ளன.