அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

21.11.2024 08:21:54

சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரடகன அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க ஆரம்பித்தார்.

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் நியமனங்கள் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து நாடாளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், ஜனாதிபதியின் வருகையுடன் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.