சாள்சை மீண்டும் இழுத்து வந்தார் சுமந்திரன்!
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. |
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளிக்கிழமை மன்னார் வருகை தந்து வேட்பாளர்களை இறுதிப்படுத்தியதாக தெரிய வருகிறது. எம்.ஏ.சுமந்திரன் மன்னார் கட்சி அலுவலகம் வருகை தந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தேர்தலுக்கான செலவுகள் பற்றியும் பேசப்பட்டது. இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளார். அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், மன்னாரின் இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகிய மூவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தெரிய வருகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பு |