திருகோணமலையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வு

05.11.2021 05:36:15

நினைவொன்றை மரமாக்குவோம் நிலையான வளமாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்ப நிகழ்வு திருகோணமலை அமைப்பின் பசுமை நண்பனாக பலநூறு மரத்தை நடத் துணைநிற்கும் கீதன் என்பவரின் பெற்றோரின் திருமண நாளில் நேற்று இடம்பெற்றது

குணசேகரன் கௌரீஸ்வரி தம்பதியரின் 37வது திருமண நாளை முன்னிட்டு திருக்கொன்றை மரம் நடுகை இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் குணசேகரன் கௌரீஸ்வரி தம்பதியினர் , பொது மக்கள் ,எதிர்கால பசுமை உலகம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மர நடுகையினை மேற்கொண்டனர்.