உண்ணாவிரதத்தை கைவிட்ட தமிழ் கைதிகள்
26.02.2022 16:14:44
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் , கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இன்று பகல் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை அவர்கள் கைவிட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது .