அரசாங்கத்திடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

16.02.2022 06:51:35

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.