பசில் பிரதமராக பதவியேற்றாலும், நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – பழனி திகாம்பரம்
30.12.2021 06:51:21
பசில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றாலும், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிதி அமைச்சராக அவர் செயற்படுகின்ற காலப்பகுதியில், அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளன.
எனவே, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அவர் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.