மாரடைப்பால் ஹயஸ் சாரதி மரணம்!

07.11.2021 15:08:28

மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தோரை ஏற்றி வந்த ஹயஸ் வாகனச் சாரதிக்கு இடைநடுவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை வீதியில் நிறுத்தியதால் பயணிகள் பாதிப்பின்றி தப்பித்தனர்.

இந்தச் சம்பவம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையாக கேரதீவுப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயராஜ் (வயது – 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.