பதில் சட்டமா அதிபராக ஜெனரல் பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்!
01.07.2024 08:08:57
தில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரீந்த ரணசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகள் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்த போதிலும், அரசியலமைப்பு பேரவை அந்த பரிந்துரையை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.