
யாழ் மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!
05.05.2025 08:25:20
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்றைய தினம் (05) காலை எடுத்து செல்லப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் வாக்களிப்பு மத்திய நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனால் குறித்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் , 517 வாக்களிப்பு நிலையங்களுக்கும் 672 வாக்குப் பெட்டிகளும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.