வருடம் முழுவதும் மின்சாரத்தை வழங்கும் திறன் உண்டு – காமினி லொக்குகே
30.12.2021 06:46:48
ஜனவரி மாத நடுப் பகுதியிலிருந்து மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்கள் மூலம் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை. வருடம் முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு திறன் உண்டு எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.