தலைவரின் பிறந்த தினத்தில் யாழ்.வீதியில் ரயர் கொழுத்திய இளைஞர்கள் !

26.11.2021 16:45:43

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்றைய தினம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூன்று இளைஞர்களையே யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்  எனவும் தெரிவித்துள்ளனர்.