திருமண மண்டபக் கட்டணம் அதிகரிப்பு
23.04.2022 12:18:12
திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
இத்துறையில் நிலைத்திருக்க, நாளை முதல் பெறப்படும் முன்பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.