யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

17.09.2022 09:50:35

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 ஏழாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (17) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

 

கடந்த மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டிகள்

இன்றைய முதலாவது போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் எதிர் ஜப்னா றோயல்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.

இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 4 விக்கட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 19.4 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக்கொண்டது.

குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் ஜெயதர்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.