நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!
16.02.2026 14:20:49
2026 டி 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று குழு 'B" இல் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.