எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல்

06.07.2022 09:17:12

வெல்லவாய காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெல்லவாய நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் வழங்கப்படும் வேளையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவித்த போது சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர், எரிபொருளைப் பெற வந்தவர்கள் அமைதியற்ற வகையில் நடந்துகொண்டதுடன், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது கற்கள் மற்றும் போத்தல்களால் தாக்கியுள்ளனர்.

இதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயர் பலகையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 20 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சந்தேகநபர்கள் 18 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் எதிலி​வெய மற்றும் வெல்லவாய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (06) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட உள்ளனர்.