மொட்டுவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்: பதவி விலகுகிறார் மகிந்த...!

08.12.2023 06:18:00

சிறி லங்கா பொதுஜன பெரமுன மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுசீரமைப்பின் கீழ் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்த மாற்றம் டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுள்ள கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை உட்பட முழுமையாக மாற்றம்

 

கட்சியின் தலைமை, செயலாளர் பதவி மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. கட்சியின் செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

மேலும், கட்சியின் உரிமையை சிறி லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எடுத்துச் செல்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

மொட்டுவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்: பதவி விலகுகிறார் மகிந்த...! | A Change In High Chairs In The Bud

 

 

சிறி லங்கா பொதுஜன பெரமுன இதுவரை கட்சித் தலைமை, செயலாளர் பதவி மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளை மட்டுமே வகித்து வந்த நிலையில், ஏனைய பதவிகளையும் பொதுஜன பெரமுனவுக்கு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.