குறிஞ்சாக்கேணி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

05.12.2021 10:40:03

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.