எரிபொருள் நெருக்கடி காரணமாக மின்வெட்டு ஏற்படக்கூடும்!

06.01.2022 05:31:57

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின் நிலையமும் மூடப்பட்டுள்ளதால்,  தேசிய மின் கட்டமைப்பில் 160 மெகா வோட் மின்சாரத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.