குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தல்!

16.09.2024 08:35:09

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காகக் குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

   

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தோடு வட கிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்டுவோம் என்கின்ற கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

இளைஞர்களின் தொழில் வாய்ப்பு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். எமது ஆட்சியில் வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார்.