வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

19.04.2024 08:05:00

இந்த நாட்களில் வெற்றிலை மற்றும் பாக்கு விலைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வெற்றிலையின் விலை 10 ரூபா முதல் 15 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பொருளாதார மத்திய நிலையங்களில், 100 வெற்றிலைகள்  400 முதல் 500 ரூபா வரை விற்கப்படுகிறது, அத்தோடு, 100 வெற்றிலையின் சில்லறை விற்பனை  விலையானது  1,000 ரூபாவாக காணப்படுகின்றது.

மேலும், ஒரு வெற்றிலையின் விலை10 முதல் 15 ரூபா வரை அதிகரித்துள்ளதோடு . 100 பாக்குகளினது  மொத்த விலை 800 ரூபாவாக காணப்படுகின்றது.