வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை

02.12.2021 05:42:05

டிசம்பர் மாதத்தில் இலங்கையிலுள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக இந்த சலுகை வழங்கப்படுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.