இலங்கை சுங்கத்திடம் சிக்கிய போதைப்பொருள்

23.03.2022 16:20:59

பனாமா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான கொக்கேய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இரும்புகளுக்கு இடையில் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கொக்கேய்ன் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

350 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் தொகை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.